மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் கடந்த பல வாரங்களாக நங்கூரமிட்டிருக்கும் கப்பலில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் ஒருவர் தகுந்த சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்தான் காரணம் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையிலிருந்து மலேசியா வழியாக சிறிய கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 200க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தற்போது இந்தோனேசியாவில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
தங்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கப்படாத வரை கப்பலை விட்டு இறங்க முடியாது என்று அவர்கள் கூறி தொடர்ந்து கப்பலிலேயே பல வாரங்களாக தங்கியுள்ளனர்.
மேரக் துறைமுகத்தில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கப்பலில் இருந்த 29 வயதான ஜேக்கப் கிறிஸ்டியன் என்ற தமிழ் வாலிபருக்கு உடல் நலம் குன்றியது.
அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறு கப்பலில் இருந்து தமிழர்கள், இந்தோனேசிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் உதவி வரவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவலை ஆஸ்திரேலியாவின் சோசலிச கட்சி அதிகாரிகளுக்கு தமிழர்கள் போன் செய்து தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து கப்பலில் உள்ள குமார் என்பவர் கூறுகையில், ஜேக்கப் கிறிஸ்டியன் மிகவும் மோசமான முறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து வந்தார்.
அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு நாங்கள் கோரியும் இந்தோனேசிய அதிகாரிகள் மறுத்து விட்டனர். மேலும் கப்பலுக்கும் மருத்துவர்களை அனுப்ப மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்த மிக மிக ஆபத்தான கட்டத்தில்தான் உதவி வந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் நிச்சயம் ஜேக்கப் கிறிஸ்டியன் பிழைத்திருப்பார் என்றார்.
சோசலிச கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அந்தோணி மெய்ன் இச்சம்பவம் குறித்துக் கூறுகையில், இந்த துயரத்திற்கு ஒரே ஒருவரைத்தான் குறை கூற முடியும். அவர் கெவின் ரூட்.
இவர்தான் இந்தோனேசிய அரசைத் தொடர்பு கொண்டு இந்தக் கப்பலை தடுத்து கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டவர். இவர்தான் இந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் கெடுத்தவர். ஓசியானிக் வைகிங் கப்பலில் உள்ளவர்களுக்குக் கிடைத்தது போன்ற அகதிகள் அந்தஸ்து இவர்களுக்கும் கிடைக்காமல் செய்தவர்.
தனது பொறுப்பை செய்யாமல், ஒருவர் பின் ஒருவராக சாகச் செய்து வருகிறார் கெவின் ரூட். இந்த மக்கள் உடனடியாக ஆஸ்திரேலியா வருவதற்கு கெவின் ரூட் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த அப்பாவி மக்கள் உயிர் பிழைக்க முடியும் என்றார்.
Thursday, 24 December 2009
Friday, 11 December 2009
உலகவாழ் தமிழர்களே வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள்.

புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகவாழ் அனைத்து தமிழர்களும் இத்திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஈழத்தில் கொல்ல்ப்பட்ட ஒரு இலட்சம் தமிழர்களின் கொடூர கொலைக்கு காரணமாகிய இந்திய காங்கிரசுடன் வேட்டைக்காரன் வெற்றிக்குப் பிறகு வியய் ஒன்றுசேரவுள்ளார் இதற்காக இராகுல் காந்தியுடனும் இரகசியஉடன்பாட்டுக்குள் வந்துள்ளார். அன்பார்ந்த உலகத் தமிழர்களே குறிப்பாக மலேசிய மற்றும் சிங்கைத்தமிழ்ர்களே கொடூர முகம் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இந்திய அரசு சிதைத்தது போல் நாளை உங்கள் நலனும் சிதைக்கப் படலாம்,எனவே தமிழினத்துக்கு எதிரான சக்தியுடன் துணைபோகும் அனைவரையும் எம்மாலன சகல வழிகளிலும் புறக்கணிப்போம்.
வேட்டைக்காரன் புறக்கணிப்பிற்கான காரணங்கள்
காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்குஆதரவளிப்பதாக நாடாகமாடும் புல்லுருவிகளை இனம்காண்பதற்காக.
மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில்பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்துபணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியேவேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தைஅனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.
இல்லை இது ஒரு திரப்படம்தானே இதைக் கலைக்கண்கொண்டுதான் பார்க்கவேண்டும் என்பவர்கள் கீழுள்ள புகைப்படங்களையும் பர்த்துவிட்டு விஜய்- அனுச்சாவின் காதல் களியாட்டத்தையும் திரையில் கண்டுகளியுங்கள்.
இந்திய அரசினால் எமது போராட்ட்த்தையும் மக்களையும் சிதைப்பதற்காகவழங்கப்பட்டதும் உலகிலே தடைசெய்யப்பட்டதுமான பொஸ்பரஸ் எரிகுண்டுகளால்எரிந்த ஈழம்.

எரிந்து சாம்பலான எமது சகோதரச்கோதரிகள்.
_-_Cadaveri_tamil.jpg)
அடங்க மறுத்த எமது மறவர் படை (உண்மயான காதாநாயகர்கள்/REAL HEROES )
Thursday, 10 December 2009
இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடம்!!
மாதக்கணக்காக இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் உடல் மற்றும் உள நிலைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.காலப்போக்கில் இந்நிலை மரணம்வரை செல்லலாமென அஞ்சப்படுகின்றது. அதிகமானவர்கள் வயிற்றோட்டம். வாந்தி மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். நோய் உச்சநிலை அடையும்வரை அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல இந்தோனேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.கடந்த 11-10-2009 அன்று 254 பேர் கொண்ட இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திசைமாற்றப்பட்ட அவர்கள் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராக் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சர்வதேச கடலெல்லையில் வைத்து வழிமறிக்கப்பட்ட வேளை தாம் கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோம் எனவும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் எனவும் மறுத்தார்கள். அவ்வேளை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி எனக் குறிப்பிட்டு ஒருபெண்னை அழைத்து வந்து தாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் தமது விடயம் பற்றி பேசுவதாகவும் நடுக்கடலில் நிற்பது பாதுகாப்பில்லை எனவும் குறிப்பிட்டு கரைக்கு செல்லுமாறு அறிவுறித்தினார். அவரின் அறிவுறுத்தலின் பெயரில் அவர்கள் கரைக்கு வர சம்மதித்தார்கள். தமது பயணத்தை திசைதிருப்பிய இந்தோனேசிய கடற்படை அதிகாரி கேணல் இரவான் தமக்கு நீரும் எரிபொருளும் வழங்கி மீண்டும் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக உறுதிமொழி அழித்தாரென அங்குள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மாதங்களாக 30 மீற்றர் படகில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவ்வகதிகளுக்கு மருந்து உணவு போன்ற அடிப்படை வசதிகளை ஐ.ஓ.எம். எனப்படும் நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்கான முழு செலவுகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கமே வழங்கிவருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசிய அரசாங்கம் மற்றும் பொது மக்கள் அகதிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் சில அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் மிகவும் அதிருப்தி அளித்து வருவதாக கப்பலில் உள்ள மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். அவசர மருத்துவ வண்டி அழைத்த நேரத்திலிருந்து மிகதாமதமாகவே வருவதாகவும் இந்நிலை ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மரண அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு 09-12-2009 அன்று 9மாத குழந்தை ஒன்று நோயுற்ற நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ வசதியை நாடிய வேளையில் தடுப்பு முகாமிற்கு வந்தால் மாத்திரமே மருந்து வழங்குவதாக வற்புறுத்தி இருப்பதும் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பெண்ணின் கணவர் பிள்ளைகளை கப்பலை விட்டு வெளியேறினால் மாத்திரமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என கட்டாயப்படுத்தி கையொப்பமிட வைத்தமையும், சிகிச்சை பெற செல்பவர்கள்மீது குற்றவாளிகள் போல் விசாரணைகளை நடத்துவதும் இச்செய்திகளை வெளியே கூறவேண்டாம் என மிரட்டுவதும் பாரிய மனித உரிமை செயற்பாடுகளாகும். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நோயாளிகளையும் தடுப்பு முகாமுக்கு வருமாறு சில அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் படகுகளில் வந்த முகமூடி அணிந்த கடற்படை வீரர்கள் அகதிகள் கப்பலை சுற்றி வளைத்து மக்களை பயமுறித்தியமையும் குறிப்பிடத்தக்கது. ஆசை வார்த்தைகளை வழங்கிய இந்தோனேசிய குடிவரவு திணைக்கள மற்றும் ஐ.ஓ.எம். நிறுவன அதிகாரிகள் கப்பலில் இருந்த 9 பேரை கப்பலைவிட்டு வெளியேறுமாறும் அவர்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி ஏற்கனவே வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் தற்போது இந்தோனேசிய குடிவரவு திணைக்களத்தின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இருநேர உணவே அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இவ் 9 பேர்களில் ஒருவர் அங்கு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொடூரமான ஆட்சியிலிருந்து விடுப்பட்டு அமைதியான சாமாதானமான வாழ்க்கையை தேடி புகலிடம் தேடிச் சென்ற அகதிகளை சர்வதேச கடல் எல்லையில் வைத்து பலாத்காரமாக அழைத்துவந்த இந்தோனேசிய கடற்படை இவ் அப்பாவி அகதிகள் மீது கொடூர சட்டங்களை பிரயோகித்து சிறைபிடிக்க முயல்கின்ற வேதனைக்குரியதும் வேடிக்கைக்குரியதுமான இந்த செயற்பாடானது. இந்தோனேசிய அரசு சில நாடுகள் மற்றும் நிறுவனங்களின் சுயலாப போக்குகளுக்கு அப்பாவி அகதிகளின் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை நசுக்குவது அகதிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரிகள் காட்டுகின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.Tuesday, 1 December 2009
உலகத்தின் ஓர வஞ்சனையில் எம்மினம்
அண்மையில் அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 254 தமிழ் அகதிகள் மீது அவுஸ்திரேலியா அரசாங்கம் காட்டுகின்ற பாராமுகம் மிகவும் கொடூரமானது. அவர்கள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது் சுமார் மூன்று தசாப்த காலமாக தாய்நாட்டில் இடம்பெறும் இனரீதியான வன்முறைகள் காரணமாக இலங்கைத் தமிழ்மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதித்தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றார்கள். இதில் பலமக்கள் அகதி தஞ்சம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்ற வரலாற்று படலங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
2002 ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் மிக அதிகமான மக்கள் திருப்பி அனுப்பபட்டார்கள். இதுமட்டுமல்லாது தாமாகவே தமது அகதி தஞ்ச கோரிக்கையை நிராகரித்து விட்டு நிரந்தர சமாதானம் திரும்பி விட்டதாக நினைத்து நாடு திரும்பியவர்களும் உண்டு. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் நிலை என்னவாகிற்று என்பதை சர்வதேச சமூகம் கண்கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் அகப்பட்ட மக்களில் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். படுகொலை செய்யப்பட்டும் ஊனமுற்றும் நிலபுலங்களை இழந்தும் சொல்லொணா துயரங்களை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள்
இளைஞர்கள் எவ்வித காரணங்களும் இல்லாமல் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான முழுபொறுப்பையும் சர்வதேச சமூகமே ஏற்றக் கொள்ள வேண்டும். அரச கட்டுபாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலை யுத்தம் முடிவடைந்ததாக இலங்கை அரசு பிரகடனபடுத்திய பின்னரும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடக்கு முறைகளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது ஊடகங்களுக்கும் பிரயோகிக்கும் இலங்கை அரசு நீpதியான நியாயமான ஆட்சியினை அங்கு நடத்தி வருவதாக செய்திகளை உலகுக்கு தெரிவித்து வருகிறது. அண்மையில் இடம் பெற்ற யுத்தத்தின் மூலம் விடிவிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறிவரும் 250000 மேற்பட்ட மக்கள் முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டவர்களில் சிலர் இலங்கை அரசின் அரசியல் நிகழ்வு காரணமாக அவர்களது பிரதேசங்களுக்கு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். மீள்குடியேற்றப்பட்டதாக கூறப்படும் மக்களில் பலர் அவர்களது பிரதேசங்களுக்கு அழைத்து செல்லப்பட்டவுடனேயே காணாமல் போகும் சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றன.
இவ்வாறான இலங்கை அரசின் நாடகங்களை சர்வதேச அரசுகள் அதிலும் குறிப்பாக அகதி தஞ்சம் வழங்கும் நாடுகள் மக்களுக்கான நிரந்தர தீர்வாக தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பது ஆழ்ந்த கருத்து. இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் ஆட்சிகாலத்தின் போது இந்தியாவில் வாழ்ந்த இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அழைத்தமையின் விளைவு அம்மக்களை சுமூகமான வாழ்க்கைக்கு இட்டுச் சென்றதா என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு யுத்தம் மட்டும் தான் அங்குள்ள பிரதான பிரச்சினை என்று கூறிவிடவும் முடியாது இலங்கை அரசின் துணை இராணுவ குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சிலரின் அட்டூழியங்களால் மக்கள் மிகவும் துன்பபட்டு கொண்டே இருக்கின்றார்கள்.
ஆட்கடத்தல், கப்பம் கோருதல் சொத்துக்களை பிடுங்குதல் மற்றும் இளைஞர் யுவதிகளை வலுக்கட்டாயமாக தமது செயற்பாடுகளுக்கு இணைத்து கொள்ளல் மறுக்கும் பட்சத்தில் கொலை செய்தல் போன்றன தமிழ் மக்களுக்கெதிரான மிகவும் கொடூரமான உள்நாட்டு சவால்களாகும். வாழ்வாதாரங்கள் அற்ற நிலையிலேயே வாழ்வு தேடி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இங்கு இன்னொரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடப்பாடு சர்வதேசத்திற்கு இருக்கின்றது. இந்தியா மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற ஐ.நா வின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிடாத நாடுகளில் தஞ்சமடைந்தோர் அங்கு எவ்வித உரிமைகளும் அற்ற ஜடங்களாகவே பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். நடமாடும் சுதந்திரம் அவர்களுக்கு கிடையாது. சிறுவர்களின் கல்வி எதிர்காலம் என்பன மிகவும் முக்கியப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இந் நாடுகளில் எமது மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்படுகின்றார்கள்.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர் வள்ளங்கள் மூலம் வெளியேறுதல் அதிகரித்துள்ளது இதற்கான காரணம் அங்கு இறுதியாக நடைப்பெற்ற யுத்தம் பலரின் நடைமுறை வாழ்வை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அவர்களது உறவுகள் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகள் வாழ் நிலங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமது சொந்த தேசத்தில் வாழ்பவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அக்கொடூரத்திலிருந்து விடுபட்டு ஓர் நிரந்தர சாந்தியான வாழ்க்கையை தேடியே அவர்கள் செல்கிறார்கள். அண்மையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் காரணமாக பல அரசியல் நாடகங்களை இலங்கை அரசு நாடாத்தி வருகின்றது. கடந்த 60 வருடகாலமாக பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் எவையும் நடைமுறைக்கு வராத பட்சத்தில் புதிதாக இயற்றப்படுகின்ற சட்டங்கள் சிறுபான்மை மக்களுக்கு தீர்வை வழங்கிவிடும் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களிலிருந்து உருவாக்கப்படாலேயன்றி நடைமுறை சாத்தியமற்றது.
சிங்கள மக்களின் மனங்களிலிருந்து சமாதானத்தை வரவழைக்க கூடிய அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதென்பதும் கடினமானது. தமிழ் அகதிகளுக்கான சுமூகமான வாழ்வை தாம் வழங்குவதாகவும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவோரை மீண்டும் நாட்டுக்கு வருவாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இதற்கு முந்தைய தேர்தல் வேட்பாளர்களும் பொய்பிரசாரங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்க ஆணை வழங்கிய ஐனாதிபதியும் அதற்கு உடந்தையாக இருந்த இராணுவ தளபதியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளமை வன்முறையான ஆட்சியையே எமது மக்கள் மீது மீண்டும் திணிக்கும் என்பது யதார்த்தமானது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலே வாழ்கின்ற மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் எதையும் வழங்கப்படாதவிடத்து கொடூர வாழ்விலிருந்து விடுபட நாட்டை விட்டு வெளியேறிய மக்களை இலங்கை அரசு மீண்டும் நாட்டுக்கு அழைப்பது அதற்கு சர்வதேசம் துணைபோவது என்பது மிகவும் கொடூரமானது. தற்போது அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை நியாயமான தீர்வுகளை வழங்கி அவர்களது நிரந்தர நிம்மதியான சமாதான வாழ்வை உறுதிபடுத்தி காட்ட வேண்டியது இலங்கை அரசின் முதற் கடமை அதன் பின்னர் அவ்வாறு அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வது உறுதிபடுத்தப்படுமிடத்து தாமாகவே தமது தாய் தேசத்தை எமது மக்கள் வந்தடைவார்கள். இது ஓரிருவருடங்களில் நடைபெறுமென்பது கேள்விக்குறியானது.
மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக அரங்கில் நிரந்தர சமாதானமாக கணிப்பிடப்பட்டு அது ஒரு கொடூர யுத்தத்திற்கு அடித்தளமிட்டமையை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசின் பொய் பிரச்சாரங்களுக்கு தமிழ் மக்களை பலி கொடுக்க கூடாதென்பது எமது வேண்டுகோள்.
வெறுமனே வருமானத்தை மட்டும் கருத்திற்கொண்டு மக்கள் புலம்பெயர்ந்து செல்கிறார்கள் என்பது இலங்கை அரசினால் எமது மக்களை தனது கொடூர ஆட்சிக்குள் அகப்படவைப்பதற்கான யுக்தியாகவே கணிப்பிடபட வேண்டியது. தமது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்தம் சமாதான வாழ்வு போன்றவையே அவர்களது பிரதான நோக்கமாகும். இலங்கை நிலைமைகளை பார்வையிட அங்கு செல்கின்ற வெளிநாட்டு பிரதிநிதிகளை வன்முறைகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்து இலங்கை அரசினால் கண்துடைப்பிற்காக அபிவிருத்தி செய்யப்பட்ட சில இடங்களுக்கு மட்டுமே அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சர்வதேச நாட்டு பிரதிநிதிகள் அரசினது துணை இல்லாமல் தன்னிச்சையாக சென்று தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது. அண்மையில் அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 254 தமிழ் அகதிகள் மீது அவுஸ்திரேலியா அரசாங்கம் காட்டுகின்ற பாராமுகம் மிகவும் கொடூரமானது.
குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணிப்பெண்கள் வயோதிபர்கள் குடும்பஸ்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் இரண்டு மாதகாலமாக அடிப்படை வசதிகளற்ற மிகச்சிறிய வள்ளத்தில் தமது வாழ்வை கழித்துக்கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
சொந்த நாட்டிற்கு பலவந்தமாக திருப்பி அனுப்புவதோ இந்தோனேசியாவில் தடுப்புமுகாம்களில் தடுத்துவைப்பதோ மிகக்கொடூரமான மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
அவர்களது அவசர நிலையை கருத்திற்கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் சிறந்த தீர்வினை மிக அவரசமாக வழங்கவேண்டுமென்பதும் சர்வதேசம் அதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டுமென்பதும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களது வேண்டுகோள்.

Subscribe to:
Posts (Atom)