மாதக்கணக்காக இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் உடல் மற்றும் உள நிலைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.காலப்போக்கில் இந்நிலை மரணம்வரை செல்லலாமென அஞ்சப்படுகின்றது. அதிகமானவர்கள் வயிற்றோட்டம். வாந்தி மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். நோய் உச்சநிலை அடையும்வரை அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல இந்தோனேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.கடந்த 11-10-2009 அன்று 254 பேர் கொண்ட இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திசைமாற்றப்பட்ட அவர்கள் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராக் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சர்வதேச கடலெல்லையில் வைத்து வழிமறிக்கப்பட்ட வேளை தாம் கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோம் எனவும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் எனவும் மறுத்தார்கள். அவ்வேளை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி எனக் குறிப்பிட்டு ஒருபெண்னை அழைத்து வந்து தாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் தமது விடயம் பற்றி பேசுவதாகவும் நடுக்கடலில் நிற்பது பாதுகாப்பில்லை எனவும் குறிப்பிட்டு கரைக்கு செல்லுமாறு அறிவுறித்தினார். அவரின் அறிவுறுத்தலின் பெயரில் அவர்கள் கரைக்கு வர சம்மதித்தார்கள். தமது பயணத்தை திசைதிருப்பிய இந்தோனேசிய கடற்படை அதிகாரி கேணல் இரவான் தமக்கு நீரும் எரிபொருளும் வழங்கி மீண்டும் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக உறுதிமொழி அழித்தாரென அங்குள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மாதங்களாக 30 மீற்றர் படகில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவ்வகதிகளுக்கு மருந்து உணவு போன்ற அடிப்படை வசதிகளை ஐ.ஓ.எம். எனப்படும் நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்கான முழு செலவுகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கமே வழங்கிவருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசிய அரசாங்கம் மற்றும் பொது மக்கள் அகதிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் சில அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் மிகவும் அதிருப்தி அளித்து வருவதாக கப்பலில் உள்ள மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். அவசர மருத்துவ வண்டி அழைத்த நேரத்திலிருந்து மிகதாமதமாகவே வருவதாகவும் இந்நிலை ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மரண அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு 09-12-2009 அன்று 9மாத குழந்தை ஒன்று நோயுற்ற நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ வசதியை நாடிய வேளையில் தடுப்பு முகாமிற்கு வந்தால் மாத்திரமே மருந்து வழங்குவதாக வற்புறுத்தி இருப்பதும் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பெண்ணின் கணவர் பிள்ளைகளை கப்பலை விட்டு வெளியேறினால் மாத்திரமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என கட்டாயப்படுத்தி கையொப்பமிட வைத்தமையும், சிகிச்சை பெற செல்பவர்கள்மீது குற்றவாளிகள் போல் விசாரணைகளை நடத்துவதும் இச்செய்திகளை வெளியே கூறவேண்டாம் என மிரட்டுவதும் பாரிய மனித உரிமை செயற்பாடுகளாகும். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நோயாளிகளையும் தடுப்பு முகாமுக்கு வருமாறு சில அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் படகுகளில் வந்த முகமூடி அணிந்த கடற்படை வீரர்கள் அகதிகள் கப்பலை சுற்றி வளைத்து மக்களை பயமுறித்தியமையும் குறிப்பிடத்தக்கது. ஆசை வார்த்தைகளை வழங்கிய இந்தோனேசிய குடிவரவு திணைக்கள மற்றும் ஐ.ஓ.எம். நிறுவன அதிகாரிகள் கப்பலில் இருந்த 9 பேரை கப்பலைவிட்டு வெளியேறுமாறும் அவர்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி ஏற்கனவே வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் தற்போது இந்தோனேசிய குடிவரவு திணைக்களத்தின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இருநேர உணவே அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இவ் 9 பேர்களில் ஒருவர் அங்கு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொடூரமான ஆட்சியிலிருந்து விடுப்பட்டு அமைதியான சாமாதானமான வாழ்க்கையை தேடி புகலிடம் தேடிச் சென்ற அகதிகளை சர்வதேச கடல் எல்லையில் வைத்து பலாத்காரமாக அழைத்துவந்த இந்தோனேசிய கடற்படை இவ் அப்பாவி அகதிகள் மீது கொடூர சட்டங்களை பிரயோகித்து சிறைபிடிக்க முயல்கின்ற வேதனைக்குரியதும் வேடிக்கைக்குரியதுமான இந்த செயற்பாடானது. இந்தோனேசிய அரசு சில நாடுகள் மற்றும் நிறுவனங்களின் சுயலாப போக்குகளுக்கு அப்பாவி அகதிகளின் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை நசுக்குவது அகதிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரிகள் காட்டுகின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.Thursday, 10 December 2009
இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடம்!!
மாதக்கணக்காக இந்தோனேசிய கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் உடல் மற்றும் உள நிலைகள் மிகவும் மோசமடைந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.காலப்போக்கில் இந்நிலை மரணம்வரை செல்லலாமென அஞ்சப்படுகின்றது. அதிகமானவர்கள் வயிற்றோட்டம். வாந்தி மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். நோய் உச்சநிலை அடையும்வரை அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல இந்தோனேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.கடந்த 11-10-2009 அன்று 254 பேர் கொண்ட இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடி சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு திசைமாற்றப்பட்ட அவர்கள் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராக் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சர்வதேச கடலெல்லையில் வைத்து வழிமறிக்கப்பட்ட வேளை தாம் கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோம் எனவும் தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் எனவும் மறுத்தார்கள். அவ்வேளை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரி எனக் குறிப்பிட்டு ஒருபெண்னை அழைத்து வந்து தாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் தமது விடயம் பற்றி பேசுவதாகவும் நடுக்கடலில் நிற்பது பாதுகாப்பில்லை எனவும் குறிப்பிட்டு கரைக்கு செல்லுமாறு அறிவுறித்தினார். அவரின் அறிவுறுத்தலின் பெயரில் அவர்கள் கரைக்கு வர சம்மதித்தார்கள். தமது பயணத்தை திசைதிருப்பிய இந்தோனேசிய கடற்படை அதிகாரி கேணல் இரவான் தமக்கு நீரும் எரிபொருளும் வழங்கி மீண்டும் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிற்கு செல்ல அனுமதிப்பதாக உறுதிமொழி அழித்தாரென அங்குள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மாதங்களாக 30 மீற்றர் படகில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவ்வகதிகளுக்கு மருந்து உணவு போன்ற அடிப்படை வசதிகளை ஐ.ஓ.எம். எனப்படும் நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்கான முழு செலவுகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கமே வழங்கிவருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசிய அரசாங்கம் மற்றும் பொது மக்கள் அகதிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கி வருகின்றனர். இருப்பினும் சில அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் மிகவும் அதிருப்தி அளித்து வருவதாக கப்பலில் உள்ள மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். அவசர மருத்துவ வண்டி அழைத்த நேரத்திலிருந்து மிகதாமதமாகவே வருவதாகவும் இந்நிலை ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மரண அச்சுறுத்தலாக இருந்து வருவதாகவும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு 09-12-2009 அன்று 9மாத குழந்தை ஒன்று நோயுற்ற நிலையில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ வசதியை நாடிய வேளையில் தடுப்பு முகாமிற்கு வந்தால் மாத்திரமே மருந்து வழங்குவதாக வற்புறுத்தி இருப்பதும் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பெண்ணின் கணவர் பிள்ளைகளை கப்பலை விட்டு வெளியேறினால் மாத்திரமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என கட்டாயப்படுத்தி கையொப்பமிட வைத்தமையும், சிகிச்சை பெற செல்பவர்கள்மீது குற்றவாளிகள் போல் விசாரணைகளை நடத்துவதும் இச்செய்திகளை வெளியே கூறவேண்டாம் என மிரட்டுவதும் பாரிய மனித உரிமை செயற்பாடுகளாகும். வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் நோயாளிகளையும் தடுப்பு முகாமுக்கு வருமாறு சில அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் படகுகளில் வந்த முகமூடி அணிந்த கடற்படை வீரர்கள் அகதிகள் கப்பலை சுற்றி வளைத்து மக்களை பயமுறித்தியமையும் குறிப்பிடத்தக்கது. ஆசை வார்த்தைகளை வழங்கிய இந்தோனேசிய குடிவரவு திணைக்கள மற்றும் ஐ.ஓ.எம். நிறுவன அதிகாரிகள் கப்பலில் இருந்த 9 பேரை கப்பலைவிட்டு வெளியேறுமாறும் அவர்களுக்கு சுதந்திரமான நடமாட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறி ஏற்கனவே வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் தற்போது இந்தோனேசிய குடிவரவு திணைக்களத்தின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இருநேர உணவே அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இவ் 9 பேர்களில் ஒருவர் அங்கு கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொடூரமான ஆட்சியிலிருந்து விடுப்பட்டு அமைதியான சாமாதானமான வாழ்க்கையை தேடி புகலிடம் தேடிச் சென்ற அகதிகளை சர்வதேச கடல் எல்லையில் வைத்து பலாத்காரமாக அழைத்துவந்த இந்தோனேசிய கடற்படை இவ் அப்பாவி அகதிகள் மீது கொடூர சட்டங்களை பிரயோகித்து சிறைபிடிக்க முயல்கின்ற வேதனைக்குரியதும் வேடிக்கைக்குரியதுமான இந்த செயற்பாடானது. இந்தோனேசிய அரசு சில நாடுகள் மற்றும் நிறுவனங்களின் சுயலாப போக்குகளுக்கு அப்பாவி அகதிகளின் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் போன்றவற்றை நசுக்குவது அகதிகள் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரிகள் காட்டுகின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment